பவானி அருகே ஜம்பையில்பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பவானி அருகே ஜம்பையில்பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பவானி அருகே ஜம்பையில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

பவானி

பவானி அடுத்த ஜம்பையில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜம்பை பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் சுப்பிரமணி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் எருமை பாலுக்கு 60 ரூபாயும், பசும்பாலுக்கு 44 ரூபாயும் வழங்க வேண்டும். மேலும் கால்நடை தீவனங்களுக்கு 50 சதவீத மானியமும், கால்நடைகளுக்கு 24 மணி நேர மருத்துவ சேவையையும் ஏற்படுத்தி தரவேண்டும். கால்நடைகள் இறந்துவிட்டால் அதற்கான இழப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கால்நடை மருத்துவர் நாள்தோறும் பால் கொள்முதல் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.


Next Story