கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

அருந்ததியர் சமூக மக்களின் உள்இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தென் மண்டல செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளர் திலீபன், ஊடக பிரிவு இணைச் செயலாளர் சத்யா, மாவட்ட பொருளாளர் பிரபாகரன், தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்காவலன், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story