மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை


மதுரையில் சின்ன வெங்காயம்  கிலோ ரூ.200-க்கு விற்பனை
x

மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது

மதுரை


மதுரைக்கு தேனி, ராமநாதபுரம் மற்றும் பேரையூர், திருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது வரத்து குறைவாக இருப்பதால் சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மதுரையில் உள்ள பரவை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், வெங்காய மார்க்கெட் ஆகிய இடங்களில் இருந்து மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மாவட்டங்களுக்கு சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயம் சில்லறை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரை மார்க்கெட்டில் வெங்காயத்தின் தரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதனால் பிற மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தின் தரம் மற்றும் விலைக்கும் மதுரை மார்க்கெட்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இந்தநிலையில், வரத்து குறைவால் விலை உயர்ந்த வெங்காயத்தின் தட்டுப்பாட்டை சமாளிக்க மைசூருவில் இருந்து மதுரை மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இதனால் மொத்தவிலையில் கிலோ ரூ.115-ரூ.120 க்கு விற்பனையானது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கன மழையால் மைசூருவில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து தேனியில் இருந்து மட்டும் சின்ன வெங்காயம் வந்து கொண்டுள்ளது. இதனால், மதுரை மார்க்கெட்டில் மொத்த விலையில் நேற்று முன்தினம் கிலோ ரூ.150-ரூ.170 வரை விற்பனையான சின்ன வெங்காயம் நேற்று கிலோ ரூ.180-ரூ.200 வரை விற்பனையானது. சாதாரண நசும்பல் வகை வெங்காயம் கிலோ ரூ.80-ரூ.100க்கு விற்பனையானது. பல்லாரி வெங்காயம் முதல் ரகம் கிலோ ரூ.25க்கு விற்பனையானது.


Related Tags :
Next Story