ராமேசுவரம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1 கோடியே 88 லட்சம் கிடைத்தது
ராமேசுவரம் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை மூலம் ரூ.1 கோடியே 88 லட்சம் கிடைத்தது.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் பாஸ்கரன், ஞானசேகரன், சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, காசாளர் ராமநாதன் உள்ளிட்ட கோவில் பணியாளர்களும், உழவார பணி குழுவினரும் ஈடுபட்டிருந்தனர். உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 88 லட்சம், 125 கிராம் தங்கம், 9 கிலோ 425 கிராம் வெள்ளி கிடைத்தது.
Related Tags :
Next Story