தமிழகத்தில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது


தமிழகத்தில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது
x

தமிழகத்தில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது

தஞ்சாவூர்

தமிழகத்தில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

பாபநாசம் தாலுகா பண்டாரவாடையில் அ.ம.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில துணைப்பொதுச்செயலாளர் ரங்கசாமி, வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், பாபநாசம் பேரூர் செயலாளர் பிரேம்நாத் பைரன், தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், தஞ்சை மாநகர செயலாளர் ராஜேஸ்வரன், விவசாய அணி பொருளாளர் ஜோதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கண்ணகி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் ரபீக் ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி பேசினார். இதில் முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் சாதிக் பாட்ஷா, பண்டாரவாடை அரபிக் கல்லூரி தலைவர் முகமது பாரூக், அரபிக்கல்லூரி பேராசிரியர் அப்துல் ஆலிம், ராஜகிரி கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் சாகுல் ஹமீது, பண்டாரவாடை சாலை பள்ளிவாசல் இமாம் காரி முகமது உபயதுல்லா, மாவட்ட செயலாளர்கள் காமராஜ்(திருவாரூர்)், பொன்.பாரிவள்ளல்(மயிலாடுதுறை) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் ராஜா என்கிற முகமது நன்றி கூறினார்.

பேட்டி

பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில கட்சிகள் செல்வாக்கான மாநிலங்களில் தேசிய கட்சிகளால் காலுன்ற இயலவில்லை. எனவே மாநில கட்சிகளை வலுவிழக்க செய்யும் முயற்சிகளில் தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி பிரச்சினையில் தேசிய கட்சிகள் கர்நாடகாவில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக நழுவிச்சென்றன. மாநிலக்கட்சிகள் தான் போராடின.

காலூன்ற முடியாது

காவிரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, மாநில கட்சிகளால் தான் பிரச்சினையை தீர்க்க முடியும். எந்தக்காலத்திலும் தமிழகத்தில் தேசியக்கட்சிகள் காலூன்ற முடியாது. தேசியக்கட்சிகளால் மாநிலக்கட்சிகளை அழித்துவிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story