தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது - தமிழக அரசு தகவல்


தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது - தமிழக அரசு தகவல்
x

தமிழகத்தில் அரசுப் வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:-

அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 ஆகும். அவா்களில் ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327. பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648. மூன்றாம் பாலினத்தவா் 275. இவா்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா். இந்த வயதைச் சோ்ந்தவா்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278 போ்.

18 வயதுக்குக் குறைவானவா்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும் உள்ளனா். 60 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 675 ஆக உள்ளது.

ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 48 ஆயிரத்து 149 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story