தேனி பகுதியில்தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.களை செய்து தர வேண்டும்:ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


தேனி பகுதியில்தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.களை செய்து தர வேண்டும்:ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

தேனி

தேனி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சக்ரவர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜெகதீச சந்திரபோஸ், மேலாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்ஜினீயர்கள் சோனா, அஜய், கவுன்சிலர்கள் கிருஷ்ண சாமி, சங்கீதா, கந்தவேலு, கவிதா, தனலட்சுமி, பிரகாஷ், அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 18 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் நடந்த கூட்டத்தில், ஜங்கால்பட்டியில் உள்ள சுகாதார நிலையத்தை கோட்டூருக்கு மாற்றி தர வேண்டும். மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும்.

உஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள இந்திரா காலனிக்கு குன்னூரில் இருந்து குழாய் பதித்து குடிநீர் கொண்டு வந்து, மேல்நிலைத் தொட்டியில் நிரப்பி வினியோகம் செய்ய வேண்டும். கோட்டைப்பட்டியில் கழிப்பறை கட்ட வேண்டும். நாடக மேடை அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட வேண்டும். மல்லைய கவுண்டம்பட்டி, சீலையம்பட்டியில் சாலை அமைத்து தர வேண்டும். கோட்டூரில் முல்லைப்பெரியாற்றின் அருகே சுடுகாட்டிற்கு காத்திருப்போர் அறை கட்டித்தர வேண்டும் மற்றும் அடிப்படை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து பேசிய தலைவர், தங்களது கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Related Tags :
Next Story