உடன்குடி பகுதியில்பனங்கிழங்கு விற்பனை கனஜோர்
உடன்குடி பகுதியில் பனங்கிழங்கு விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது, பனங்கிழங்கு அறுவடை நடந்து வருகிறது. உடன்குடி, பஜார்வீதிகள், கிராம தெருக்களிலும் பனங்கிழங்கு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதேபோன்று கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் தோட்டங்களில் விளையும் பனங்கிழங்குகளை சாக்குகளில் அடைத்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவித்து உள்ளனர். இங்கு ஒரு கிலோ கிழங்கு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு கொண்டு வாங்கி செல்கின்றனர்.
Related Tags :
Next Story