போடியில்நகராட்சி ஆணையர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு


போடியில்நகராட்சி ஆணையர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போடியில் நகராட்சி ஆணையர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

தேனி

போடி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி. இவர், போடி சுப்புராஜ் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று மதியம் 1 மணி அளவில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டதும் அக்கம்பக்கத்தினர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 8 அடி நீள சாரைப்பாம்பு ஆகும். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அதை வனப்பகுதியில் விட்டனர்.


Related Tags :
Next Story