போடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு


போடியில்  போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
x

போடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

தேனி

போடி நகர் போலீஸ் நிலையம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் வனராஜ், போடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டு போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினர். இதையடுத்து போதை மாற்றும் பாதை என்ற தலைப்பிலான குறும்படம் வெளியிடப்பட்டது.


Next Story