தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்


தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 917 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 53 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 917 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 53 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் நேற்று தமிழகம் முழுவதும் 30-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் 140 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 917 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. அதே போன்று மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்றும் விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

இந்த முகாம்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இன்னும் சுமார் 2.5 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களை 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக நேற்று மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

53 ஆயிரம் பேர்

அதே போன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள மற்ற மக்கள் தனியார் தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, முகாம்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசி குறைவானவர்களே போட்டுக் கொண்டனர். 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பலர் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட முகாமுக்கு வந்து இலவசமாக போட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 53 ஆயிரத்து 695 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


Next Story