திருவள்ளூர்: லாரியில் இருந்து கீழே விழுந்த ராட்சத தூண்கள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்


திருவள்ளூர்: லாரியில் இருந்து கீழே விழுந்த ராட்சத தூண்கள்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்
x

திருவள்ளூரில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத தூண்கள் சங்கிலி அவிழ்த்து கீழே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் தலைநகரில் உள்ள ஜெ.எண்.சாலையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கக் கூடிய சாலையாக உள்ளது. மேலும் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

இந்த நிலையில் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் தனியார் தொழிற்சாலை பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகே சங்கிலி அறுந்து சாலையில் விழுந்து சிதறின.

இதில் அதிஷ்டவசமாக அந்த லாரியின் அருகே சென்ற வாகன ஓட்டுனரகளுக்கு எந்த ஒரு காயம் இல்லாமல் தப்பினார்கள். தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து உடனடியாக அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்தது.


Related Tags :
Next Story