தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்தவர் ரசூல் (வயது 27). இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்பனை செய்ததாக ரசூலை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story