தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்  ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், கடந்த 19.9.1968-ல் நடந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் உயிரிழந்த ரெயில்வே தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்துதல் மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி ரெயில் நிலையம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் அழகுவிஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தின் போது இறந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே மஸ்தூர் யூனியன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story