இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்க தொடக்க விழா
திண்டுக்கல்லில் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்க தொடக்க விழா நடந்தது.
திண்டுக்கல்லில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் புதிய மாவட்ட வட்டார கிளைகள் தொடக்க விழா நடந்தது. இதற்கு மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட தலைவர் ரத்தினவேல் பாண்டியன் வரவேற்றார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் வேல்முருகன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநில துணை தலைவர் ஞானசேகரன் வாழ்த்தி பேசினார். மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் சம வேலைக்கு, சம ஊதியம் வெல்லும் வரை உறுதியாக போராடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நத்தம், கொடைக்கானல், வத்தலக்குண்டு, தொப்பம்பட்டி, பழனி, ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை ஆகிய 7 வட்டார கிளைகள் தொடங்கப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து வட்டார எஸ்.எஸ்.டி.ஏ. உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஜஸ்டின் செய்திருந்தார்.