தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா
சிவகங்கை தெற்கு ராஜவீதியில் தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நடந்தது.
தமிழகத்தில் அதிக கிளை கொண்டுள்ள தங்கமயில் நிறுவனம் சிவகங்கையில் கடந்த 2013-ம் ஆண்டு தனது கிளையை நிறுவியது. தற்போது தங்கமயில் ஜூவல்லரி பல்வேறு அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிவகங்கை தெற்கு ராஜவீதியில் புது முகவரியில் ஜொலிக்கிறது.இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த புதிய கிளையை நிர்வாக இணை இயக்குனர் என்.பி. குமார் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள், நிர்வாக பொது மேலாளர்கள் அருண், கிஷோர்லால் கலந்து கொண்டனர். விழாவில் சிவகங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர்.
சிவகங்கை தங்க மயில் ஜூவல்லரியில் தங்க மாங்கல்யம் திருமண நகை கலெக்சன்கள் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. தங்கம் வைரம், வெள்ளி மற்றும் பரிசுப்பொருட்களுக்கு பிரத்தியேக தனிப்பிரிவு உள்ளது. திறப்பு விழா சலுகையாக ஒவ்வொரு 8 கிராம் தங்கத்திற்கு ரூ.1500 தள்ளுபடி, வெள்ளி கிலோவிற்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி, வைரம் கேரட்டிற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு. மேலும் ரூபாய் 100000-க்கு மேல் பர்ச்சேஸ் செய்யும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிப்ரவரி 12-ந்தேதி வரை வழங்கப்படுகிறது.