தொடர் மழையினால் தடுப்பணை நிரம்பியது


தொடர் மழையினால் தடுப்பணை நிரம்பியது
x

வெம்பக்கோட்டை அருகே தொடர்மழையினால் தடுப்பணை நிரம்பியது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே தொடர்மழையினால் தடுப்பணை நிரம்பியது.

தடுப்பணை நிரம்பியது

வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்டியாபுரம், எழுவன்பச்சேரி, ராமுதேவன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் காயல்குடி வைப்பாறு இணையும் இடத்தில் உள்ள தடுப்பணை முழுமையாக நிரம்பியது. இப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளமும், 25 ஏக்கர் பரப்பளவில் நெல்பாசனமும் நடைபெற்று வருகிறது. விவசாய பணிகளை ஏற்கனவே இப்பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்திய நிலையில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்மழையினால் காயல்குடி வைப்பாறு இணையும் இடத்தில் உள்ள தடுப்பணை முழுமையாக நிரம்பியது.

இந்த தடுப்பணை சென்ற ஆண்டு நிரம்பியது. அதேபோல இந்த ஆண்டும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அணை நிரம்பியதால் குடிநீர் பிரச்சினையும் இருக்காது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறினர்.



Next Story