புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே சம்பவம்: மகளிர் சுய உதவிக்குழு தலைவியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே சம்பவம்: மகளிர் சுய உதவிக்குழு தலைவியிடம்  3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே மகளிர் சுய உதவிக்குழு தலைவியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பூண்டி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். தனியார் கம்பெ னி ஊழியரான இவரது மனைவி தாரணி (வயது 42). இவர் அப்பகுதியில் மகளிர் சுயஉதவி குழு தலைவியாக உள்ளார். இவர்களது மகள் பிரதீபா. திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் தாரணி மற்றும் மகள் பிரதீபா ஆகியோர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் சென்றனர். பிறகு மோட்டா ர் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

மோட்டார் சைக்கிளை பிரதீபா ஓட்டினார். திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் தாரணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர். ஆனால் சங்கிலியை தாரணி இறுக்கமாக பிடித்து கொண்டதால் 3 பவுன் தங்க டாலர் சங்கிலியை மட் டும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

மேலும் 5 பவுன் தங்க தாலி சரடு தப்பியது. இதுகுறித்து தாரணி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெ க்டர் சுரே ஷ் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சங்கிலி பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்


Next Story