ஒகேனக்கல்லில் அதிகரிக்கும் நீர்வரத்து..! பரிசல் இயக்க தடை விதிப்பு


ஒகேனக்கல்லில் அதிகரிக்கும் நீர்வரத்து..! பரிசல் இயக்க தடை விதிப்பு
x
தினத்தந்தி 26 July 2023 2:48 PM IST (Updated: 26 July 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி மேற்கொள்ள தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Next Story