38 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி ஆர்ப்பாட்டம்


38 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி ஆர்ப்பாட்டம்
x

38 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 38 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உள்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத்தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் யூனுஸ்கான், மாநில செயலாளர் கம்பம் சாதிக், மண்டல தலைவர் நூர் முகமது, மண்டல செயலாளர் அப்துல்காதர் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தடா ஜெ.அப்துல் ரஹீம் பேசும்போது, "தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை ஏற்று 100 சதவீதம் முஸ்லிம்களும் தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் மு.க.ஸ்டாலின் இன்று முதல்-அமைச்சராக இருக்கிறார். ஆனால், முஸ்லிம் சிறைவாசிகள் யாரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. எனவே, 38 முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் நளினி உள்ளிட்ட 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.


Next Story