தொழில் காப்பகங்கள் சந்திப்பு கண்காட்சி: முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்


தொழில் காப்பகங்கள் சந்திப்பு கண்காட்சி: முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
x

தொழில் காப்பகங்கள் சந்திப்பு கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி(நாளை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொழில் காப்பங்கள் சந்திப்பு கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தொழில் காப்பகங்கள் தர வரிசையை முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


Next Story