பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு
கலசபாக்கத்தில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்
கலசபாக்கத்தில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் குழந்தை
கலசபாக்கம் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஒரு கணவன்-மனைவிக்கு 15 வயதில் ஒரு மகளும், 13, 10, 9 ஆகிய வயதுகளில் 3 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த அந்த பெண்ணுக்கு 45 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த பெண் குழந்தைக்கு இன்று திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்
போலீசார் விசாரணை
பின்பு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த 45 நாட்களில் பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.