ரெயில்வே சிக்னல் கருவிகளை ஆய்வு செய்ய வேண்டும் -ரெயில்வே வாரியம் உத்தரவு


ரெயில்வே சிக்னல் கருவிகளை ஆய்வு செய்ய வேண்டும் -ரெயில்வே வாரியம் உத்தரவு
x

ரெயில்வே சிக்னல் கருவிகளை ஆய்வு செய்ய வேண்டும் பொது மேலாளர்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவு.

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் மோதிய கோர விபத்தில் 250-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்து உள்ளனர். ரெயில் விபத்துக்கு பராமரிப்பு பணியை முறையாக மேற்கொள்ளாததே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்த நிலையில், ரெயில்வே சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

குறிப்பாக, தொழில்நுட்ப கோளாறுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அதுகுறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். டபுள் லாக்கிங் உள்ளிட்ட மற்ற உபகரணங்களை பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து சோதனை பணிகளையும் 100 சதவீதம் முடிக்க வேண்டும். ஏதாவது கோளாறுகள் இருந்தால் வரும் 14-ந் தேதிக்குள் ரெயில்வே வாரியத்திடம் தெரிவிக்க வேண்டுமென இந்திய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.


Next Story