திட்டப்பணிகளை வேளாண்மை அதிகாரி ஆய்வு


திட்டப்பணிகளை வேளாண்மை அதிகாரி ஆய்வு
x

திட்டப்பணிகளை வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் வட்டாரத்தில் விளக்கனேந்தல் ஊராட்சியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் 20 ஏக்கர் தரிசு நில தொகுப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். மேலும் அந்த ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்டுள்ள தரிசு தொகுப்பு நிலத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை பார்வை யிட்டார். அப்போது அவர் பேசுகையில், சீர்செய்யப்பட்ட தரிசி நிலத்தில் அரசின் மானியத்துடன் அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்று நீரை தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளும் சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து கீரனூர் விவசாயிகள் உற்பத்தி குழுவிற்கு கூட்டுப் பண்ணையம் திட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு வழங்கப்பட்ட டிராக்டர் எந்திரம் குழு விவசாயிகள் பயன்படுத்தி வருவதையும் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து தேரிருவேலி கிராமத்தில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை பார்வையிட்ட பின் தொகுப்பு தரிச நிலத்தினை சீர்திருத்தம் பணிகளை விரைந்து முடித்து நடப்பு பருவத்தில் குதிரைவாலி பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என கூறினார். ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் உடன் இருந்தார். ஆய்வுக்கான ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலர் சுபதர்ஷினி தங்கமலர் மட்டும் முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story