ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்த போராட்டம் தற்காலிக வாபஸ்


ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்த போராட்டம் தற்காலிக  வாபஸ்
x

சென்னை தலைமைசெயலகத்தை வரும் 11 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

சென்னை,

கடந்த 2-ந் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஏப்.11-ந் தேதி கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தியதாகவும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்தனர். அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story