துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 6 Aug 2022 3:57 PM GMT (Updated: 6 Aug 2022 4:16 PM GMT)

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகதீப் தன்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துக்கள். மாநிலங்களவையில் ஜனநாயக விவாதங்களை வலுப்படுத்துவதோடு, அரசியலமைப்பில் பொதிந்துள்ள கொள்கைகள் உங்கள் பதவி காலத்தில் நிலைநிறுத்தப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story