ஜெயங்கொண்டம் உதவி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
ஜெயங்கொண்டம் உதவி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உதவி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மார்க்கெட் கமிட்டி எதிரே குஞ்சிதபாதபுரம் பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் மின்வாரிய அரசு கட்டிடமான ஜெயங்கொண்டம் துணை மின் நிலைய வளாகத்தில் கடந்த 1-ந்் தேதி முதல் இயங்கி வருகிறது எனவே மீன்சுருட்டி, தா.பழூர் மற்றும் சுத்தமல்லி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட நுகர்வோர்கள் புதிய கட்டிடத்திற்கு உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story