வேலை வாய்ப்பு முகாம்


வேலை வாய்ப்பு முகாம்
x

சேந்தமங்கலத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சேந்தமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அழகு மூலம் இளைஞர் களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட திட்ட இயக்குனர் பிரியா தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். அப்போது முகாமில் பங்கேற்ற 14 நிறுவனங்களின் அதிகாரிகள் 254 இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தினர். அதில் 128 பேர் தேர்வு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரவிச்சந்திரன், பாஸ்கரன், வட்டார இயக்க மேலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story