சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சவர தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

ஈரோடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சவர தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பாலியல் தொல்லை

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). சவர தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி, பவானியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த வேல்முருகன், சிறுமியை கட்டி பிடித்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார்.

அதனால் வேல்முருகன் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சிறுமி வீட்டுக்கு சென்று இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடித்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வேல்முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகையாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.



Next Story