ஆத்மநாதசுவாமி கோவிலில் நீதிபதிகள் சாமி தரிசனம்


ஆத்மநாதசுவாமி கோவிலில் நீதிபதிகள் சாமி தரிசனம்
x

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் நீதிபதிகள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 2 நீதிபதிகளுக்கும் கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் உள்ள அனைத்து சிற்பங்களையும் ரசித்து பார்த்தனர். அப்போது அவர்களுடன் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், அறந்தாங்கி சப்-கோர்ட்டு நீதிபதி தீபா, அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சொர்ணராஜ், ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம், அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார், ஆவுடையார்கோவில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story