செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பு: நீதிபதி அறிவிப்பு


செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது  வரும் 20 ஆம் தேதி தீர்ப்பு:  நீதிபதி அறிவிப்பு
x

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் மூன்று மாதமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதி அல்லி இன்று விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


Next Story