மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி பயிற்சி மொழியா? கி.வீரமணி அறிக்கை


மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி பயிற்சி மொழியா? கி.வீரமணி அறிக்கை
x

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை நீடிக்கும் என்று அந்நாள் பிரதமர் நேருவின் அரசியல் வாக்குறுதி தனிச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசமைப்பு சட்டம் தந்துள்ள குடிமக்களின் உரிமையை, பல மதங்கள், பல மொழிகள் உள்ளன என்ற நிலையில், 'தேசிய மொழி' என்ற தனித்துவத்தை எந்த மொழிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் குறிப்பிடவில்லை.

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை நீடிக்கும் என்று அந்நாள் பிரதமர் நேருவின் அரசியல் வாக்குறுதி தனிச் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தொடரும் நிலையிலும், அதற்கு பின் வந்த மத்திய அரசின் நிலைப்பாடுகளும் 'நீர்மேல் எழுதிய எழுத்தல்ல, பாறையில் செதுக்கப்பட்ட உறுதிகள்' என்பதை மறந்து நெருப்போடு விளையாடுகிறார்கள்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இனி இந்தி தான் பயிற்சி மொழியாம். அனைத்திந்திய போட்டித் தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கானவை இனி இந்தியில் தானாம். என்ன கொடுமை. நம்முடைய இளைஞர்கள் இனி பல்கலைக்கழகத்திற்கு உள்ளும், அரசுப் பணிகளுக்கு உள்ளும் நுழைய முடியாமல் செய்ய, இப்படி திடீர் தடுப்பு சுவர்களா? வீண் பிடிவாதத்தை கைவிட்டு நாட்டின் அனைவரையும் ஒத்த குடிமக்களாக்கி, மத்திய அரசை நடத்த முன்வாருங்கள். குறைந்தபட்சம் அரசமைப்பு சட்டத்தின் பெயரால் எடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள். இல்லையேல், போராட்டம் வெடிப்பது தவிர்க்க இயலாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story