சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.410-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.410-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.410-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 4.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.350-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.100-க்கும், சென்டுமல்லி ரூ.32-க்கும், பட்டுப்பூ ரூ.59-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.410-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும்,, அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story