காஞ்சிபுரம் பட்டாசு விபத்து: 2 ஊராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை


காஞ்சிபுரம் பட்டாசு விபத்து: 2 ஊராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை
x

காஞ்சிபுரம் அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம்,

காஞ்சீபுரம் அருகே குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story