"மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி" - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்லாத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதைத் தவிர, கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பூங்கா, நூலக கட்டடம், ஒருங்கிணைந்த வளர்ச்சி மையம் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

செங்கை சிவம் மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

கலைஞர் கருணாநிதி அண்ணா மேம்பாலத்தை கட்டினார். அது 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ஒமந்தூரார் மருத்துவமனை, கிண்டி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், மெட்ரோ ரெயில் திட்டம் என பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஓமந்தூரார் மருத்துவமனை முதலில் சட்டப்பேரவை வளாகமாக கருணாநிதி பார்த்து பார்த்து கட்டினார்.

ஆனால் சூழல் காரணமாக அது மருத்துவமனையா மாறியது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. கடந்த ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தி்ல இருந்து காப்பாற்றப்பட்டது. மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைத்து அந்த நிலையை திராவிட மாடல் ஆட்சி மாற்றியது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story