கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகா்கோவில்:
பிறந்தநாளையொட்டி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கவிமணி பிறந்தநாள்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 146-வது பிறந்தநாள் விழா நேற்று குமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் தலைமையில் கவிமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் கவிமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவிகள்- அதிகாரிகள் மரியாதை
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் கவிமணி சிலைக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள கவிமணி சிலைக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் நளினி, கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.