மன்னர் முத்துவடுக நாதர் குருபூஜை விழா


மன்னர் முத்துவடுக நாதர் குருபூஜை விழா
x

மன்னர் முத்துவடுக நாதர் குருபூஜை விழா நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்

சிவகங்கை மாமன்னர் முத்து வடுகநாதரின் 250-வது குருபூஜை விழா காளையார் கோவிலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் கலந்து கொண்டு மன்னர் முத்துவடுக நாதரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். இதனையொட்டி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story