கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி
கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் குண்டு கரை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவிலில் இருந்து சாமிநாத சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சூரனை வில் மற்றும் வேலாலும் சம்காரம் செய்தார். பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சியில் எழுந்தருளிய முருக பெருமான் சூரனை வெள்ளி வேலால் சம்காரம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் பெருவயல் ரணபலி முருகன் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story