மதியம் 1 மணி முதல் நாளை ேகாவில் நடை அடைப்பு


மதியம் 1 மணி முதல் நாளை ேகாவில் நடை அடைப்பு
x

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 1 மணி முதல் நாளை ேகாவில் நடை அடைக்கப்படுகிறது.

ராமநாதபுரம்

நாடு முழுவதும் நாளை(செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நடைபெறுகிறது. பொதுவாக பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும், அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் வருவது வழக்கம். இந்த நிலையில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளான நாளை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மாலை 5.47 மணி முதல் 6.26 மணி வரையிலும் சந்திர கிரகணம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடை திறப்பில் மாற்றம் செய்யப் பட்டு உள்ளது. அதன்படி ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று வழக்கம் போல் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 6 மணி வரையிலும் ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு 4.30 மணிக்கு சாமி தங்க ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளி ரதவீதியை சுற்றி வந்த பின்னர் இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், சாமியை தரிசனம் செய்யவும் அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story