கிருஷ்ணகிரியை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்


கிருஷ்ணகிரியை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்
x
தினத்தந்தி 1 Dec 2022 7:30 PM GMT (Updated: 1 Dec 2022 7:30 PM GMT)

கிருஷ்ணகிரியை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்று பொதுமக்களை, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்று பொதுமக்களை, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

சீரமைப்பு பணிகள்

கிருஷ்ணகிரி சுங்கசாவடி முதல் ஆவின் மேம்பாலம் வரையில் தற்போது பெய்த மழையால் சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. அந்த இடத்தில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அடிபகுதியில் மூன்று பிரதான சாலை சந்திப்பு பகுதியாக அமைந்துள்ளதால் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறுகிறது.

எனவே அந்த இடத்தில் போக்குவரத்து காவலரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். நாட்டான்கொட்டாய் பிரதான சாலையின் ஓரத்தில் பூக்கடைகள் மற்றும் மீன் கடைகள் அமைந்துள்ளதால் கனரக வாகனங்கள் அதிகம் சாலையோரம் நிறுத்தப்பட்டு தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது- எனவே அந்த இடத்தில் உள்ள கடைகளை அகற்றி, வாகனங்களை நிறுத்தாத வகையில் கண்காணிக்க வேண்டும்.

விபத்து இல்லாத மாவட்டம்

பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சாலை விதிகளை கடைபிடித்து உயிர் இழப்புகளை தவிர்க்க வேண்டும். விபத்து இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Reporter : S.Ramamoorthy_Staff Reporter Location : Salem - Krishnagiri depot


Next Story