கிருஷ்ணகிரி: பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து - 11 மாணவர்கள் காயம்


கிருஷ்ணகிரி: பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து - 11 மாணவர்கள் காயம்
x

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் 11 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி மீது பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் வேனில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் காயம் அடைந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story