காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:45 PM GMT)

ஆதிச்சனூரில் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே ஆதிச்சனூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், தனபூஜை, சாந்திஹோமம், வாஸ்து சாந்தி பூஜை ஆகியவற்றுடன் தொடங்குகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இதையடுத்து கும்பாபிஷேக நாளான நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று 10.30 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story