மேலூர் அருகே வடக்குவாச்செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மேலூர் அருகே வடக்குவாச்செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே அ.வல்லாளபட்டியில் உள்ள வடக்குவாச்செல்லியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 27-ந் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் முதற்கால பூஜையானது தொடங்கி ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனைகளுடன் யாகவேள்வி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தையொட்டி மகாபூர்ணாகுதி, தீபாராதனைகள் காட்டப்பட்டது. அதன் பின் யாகசாலையில் இருந்து புனித நீர் கும்ப கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள், கிராம மக்கள் கோவிலை ஊர்வலமாக சுற்றி வந்தனர். அ.வல்லாளபட்டி வெள்ளி மலையாண்டி சுவாமி கோவிலின் மகேஸ்வர சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். புனித நீரை பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் தெளித்தனர். இதைதொடர்ந்து மூலஸ்தானத்திற்கு, சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜை நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி, மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளான புலிப்பட்டி, கிடாரிபட்டி, அழகாபுரி, செட்டியார்பட்டி, சூரக்குண்டு, அய்யர்பட்டி, கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம், அழகர்கோவில், புதுச்சுக்காம்பட்டி, மேலூர் உள்பட பல இடங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Related Tags :
Next Story