உடையார்பாளையம் இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


உடையார்பாளையம் இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

உடையார்பாளையம் இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்- திருச்சி சாலை தெருவில் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 19-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், கணபதி ஹோமம், வாஸ்து, சாந்தி, பிரவோசலபலி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம் ஆகிய பூஜைகள் நடந்தது. பின்னர் இரவு 8 மணியளவில் கலாதர்ஷணம், முதல் கால யாக பூஜை, திரவியாகுதி, பூரணாகுதி, தீபாராதனை ஆகிய பூஜைகள் நடந்தது. 20-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் மங்கல இசை, வேதபாராயணம், 2-ம் கால யாகசாலை பூஜை திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் மங்கல இசை, வேதபாராயணம், 3-ம் கால யாகசாலை நடந்தது. 21-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் மங்கல இசை, வேதபாராயணம், 4-ம் காலை யாகசாலை பூஜை திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் 5-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு மேல் விசேஷ சாந்தி, மங்கல இசை, வேதபாராயணம், கோபூஜை, 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பிறகு 9 மணிக்கு மேல் நாடி சந்தானம் ஸ்பரிசாகுதி, தக்வார்ச்சனைகள், திரவியாகுதி நடந்து பின்னர் 10.30 மணிக்கு மேல் மகாபூர்ணாகுதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்து ஸ்ரீ இன்ப மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.

விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் க.வெங்கட்ராமன், தர்மகர்த்தா சூரியநாராயணன், நாட்டார்கள் இளங்கோவன், தர்மன் மற்றும் விழா திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story