பனையடி கருப்புசாமி கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா


பனையடி கருப்புசாமி கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா
x

திருச்சி அருகே பனையடி கருப்புசாமி கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆடு, கோழிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.

திருச்சி

திருச்சி அருகே பனையடி கருப்புசாமி கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆடு, கோழிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.

பனையடி கருப்புசாமி கோவில்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவாண்டகுறிச்சி கிராமத்தில் பனையடி கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குட்டி குடித்தல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக குட்டி குடித்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கருப்பு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மருளாளி நடராஜன் கோவிலில் உள்ள மிகப்பெரிய அரிவாள் மீது ஏறி நின்று 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் ரத்தத்தை உறிஞ்சி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மருளாளியிடம் அருள்வாக்கு பெற்று சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாமி வீதி உலா

இந்த நிகழ்ச்சியில் கோவாண்டகுறிச்சி, புதூர்பாளையம், வாணதிரையன்பாளையம், ஆலம்பாக்கம், புள்ளம்பாடி, கல்லக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இரவு சாமி திருவீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story