மின்சார சட்ட மசோதாவில் "இலவச மின்சாரத்தை நிறுத்த சொல்லவில்லை" எல்.முருகன் பேட்டி
“மின்சார சட்ட மசோதாவில் இலவச மின்சாரத்தை நிறுத்துங்கள் என இதுவரை சொல்லவில்லை” என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
தூத்துக்குடி,
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை நாளை (அதாவது இன்று) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகையால் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும்.
மின்சார சட்டம்
போதைப்பொருளை ஒழிப்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது. தமிழக அரசு முக்கியமான, தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மின்சார சீர்திருத்த சட்டம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று இதுவரை சொல்லவில்லை. முழு சட்டம் வந்த பின்பு தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.