தொழிலாளர் தினம்: மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு!
தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story