கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு


கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப்பாதையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர்மழை ெபய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. மேலும் மலைப்பாதையில் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. அதன்படி கொடைக்கானலில் இருந்து பெரியகுளத்துக்கு செல்லும் அடுக்கம் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அந்த மலைப்பாதையில், குருடிக்காடு உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதோடு ராட்சத பாறைகளும் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாதையில் விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுக்கம் பிரதான மலைப்பாதையில் சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் அடுக்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டும் இந்த சாலையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே மலைக்கிராமங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Next Story