வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

ஹரியானா மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் கோர்ட்டு வளாகம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மணிப்பூர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்று வரும் தொடர் வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story