வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் குடியாத்தம் கிளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் டி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜி.ஜெயச்சந்திரன், பொருளாளர் கே.தியாகு, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.சுரேஷ்பாபு, என்.எ.புருஷோத்தமன், ஜி.சுப்பிரமணி, வி.குல்ஜார்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் சு.சம்பத்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி கோஷமிட்டனர்.

பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் கே.எம்.பூபதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இதில் வக்கீல்கள் ஜாவீத்அகமது, கே.துரைசாமி, டி.நமச்சிவாயம், பி.தண்டபாணி, ஏ.திருநாவுக்கரசு, எஸ்.திம்மரசு, என்.முனிராஜுலு உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் வி.வடிவேல் நன்றி கூறினார்.


Next Story